பாஜக தலைவராக அமித் ஷா தொடர்வார்... பாஜக முடிவு..!

Published : Jun 13, 2019, 06:08 PM IST
பாஜக தலைவராக அமித் ஷா தொடர்வார்... பாஜக முடிவு..!

சுருக்கம்

பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  

பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அமித் ஷா தலைமையில் பாஜக மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் டெல்லியில் அக்கட்சித் தலைமையகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.

அப்போது லோக்சபா தேர்தலில பாஜக 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித் ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த  மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் கானை ஒருங்கிணைப்பாளராக அறிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!