தோனியை சந்தித்த அமித் ஷா!! பின்னணி என்ன..?

By karthikeyan VFirst Published Aug 6, 2018, 3:25 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்து பேசினார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். 

2019 மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக, இப்போதிலிருந்தே தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை சந்தித்து பாஜக அரசின் சாதனைகளை விளக்கி அவர்களின் ஆதரவை திரட்டும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. 

இதற்காக நாடு முழுவதும் பாஜகவை சேர்ந்த 4000 பேர், பல துறைகளை சேர்ந்த ஒரு லட்சம் பிரபலங்களை சந்தித்து அவர்களின் ஆதரவை திரட்டும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த 4000 பேரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் அடக்கம். அவர் மட்டும் 25 பேரை சந்திக்க உள்ளார். 

அமித் ஷா, முன்னாள் ராணுவ தலைவர் தல்பீர் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் நடிகை மாதுரி தீக்‌ஷித் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார் அமித் ஷா. அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்து பாஜக அரசின் சாதனைகள் அடங்கிய பட்டியலை கொடுத்தார். இந்த சந்திப்பின்போது, அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார்.
 

click me!