5 வருடமாக தொடர்ந்த பாஜக- அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், அதிமுகவிற்காக கூட்டணி கதவுகள் திறந்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுகவும் அதிகார மோதலும்
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகார போட்டி தலைதூக்க தொடங்கியது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என 4 அணிகளாக பிளவுப்பட்டது. இந்தநிலையில் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. எனவே பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருந்தனர்.
தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்
இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விலகியது. இதனையடுத்து மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜக பல கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆனால் அதிமுக தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. இதனிடைய தற்போது பாஜக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதல் ஒன்றுக்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாடு நாட்டின் முக்கியமான மாநிலம், அதற்கென தேர்தல் அறிக்கையில் நிறைய விஷயங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி கதவு திறந்துள்ளது
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் பாஜகவிற்கு பாதிப்பா என்ற கேள்விக்கு பதில அளித்தவர், ஜனநாயக நாட்டில் யாரும் புதிய கட்சியை தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். ஆனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்து விட்டது, 3வது அணி அமைக்க திட்டமா.? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்துள்ளது. இது குறித்து ஆலோசித்து வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
BJP vs ADMK : பாஜகவில் இன்று இணையவுள்ள 14 மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் யார்.?யார்.? வெளியான பட்டியல்