எதிர்ப்புக்கு அடி பணிந்தார் அமித்ஷா...!! அரசியல் நெருக்கடியால் அந்தர் பல்டி...!!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 6:52 PM IST
Highlights

இந்தி மொழியை படித்தே தீரவேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. என்று அவர் விளக்கம் கொடுத்ததுடன். தானும் இந்தி மொழியை பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன்தான் என்று அவர் கூறியுள்ளார்

பொது மொழி குறித்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுத்துள்ளதுடன், இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று தான் கூறவில்லை, கூடுதலாக இந்தியை கற்றால் நலமாக இருக்கும் என்றுதான் கூறினேன் என தன் நிலைபாட்டிலிருந்து அதிரடியாக பின்வாங்கி உள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, ஒரே மொழி, ஒரே தேசம் என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் இந்தியை அமல்படுத்தும் வேலையில் மத்திய அரசு தீவிரம் காட்டியது.  இந்தியை அனைவரும் படித்தை தீரவேண்டும் அதுவே நம் பொதுமொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா  மேடை தோறும் முழங்கி வந்தார். அவரை தொடர்ந்து  பிரதமர் மோடி உட்பட பாஜகவினரும் அதே கருத்தை முன்வைத்து  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் முன்வைத்த காலை பின்வைக்காத பேர்வழி என பெயர் பெற்ற அமித்ஷா, நாடு முழுமைக்கும் இந்தியை கொண்டுவந்தே தீருவேன் என்று தன் நிலைபாட்டில் உறுதியாக நின்றார். இது  இந்தி பேசாத மாநில மக்களின் மத்தியில் கொந்தளிப்பே ஏற்படுத்தியது. அமித்ஷாவின் முடிவு ஆபத்தானது என கூறி இந்தி பேசாத மாநிலத்தின் அரசியல் கட்சிகள் கடுமையாக எச்சரித்த துடன் கண்டிக்கவும் செய்தனர். 

குறிப்பாக தென்னிந்திய மாநில கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வந்தன. அந்த வரிசையில் கர்நாட மாநில முதலமைச்சர் எடியூரப்பா பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும், அமித்ஷா தன் நிலைபாட்டை திரும்பெற வேண்டும் என வலியுறுத்தியதுடன். கருநாடகத்தில் கன்னடமே தாய்மொழி, கன்னடமே முதல் மொழி, மற்ற மொழிகளை யாரும் முன் வந்து திணிக்க முடியாது , மொழி விவகாரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என வலுவாக எதிர்த்தார். அதேநேரத்தில்  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த் இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது, குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் இதை ஏற்காது, வட இந்தியாவில் இந்தி பேசாத மாநில மக்களும் அதை ஏற்கமாட்டார்கள், எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என்றார்.  அவரின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இந்தி மொழி குறித்து தன் நிலைபாட்டை விளக்கியுள்ளார் அமித்ஷா, அதாவது இந்தி மொழி குறித்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்திமொழி அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயம் என்று நான் கூறவில்லை, மூன்றாவதாக ஒரு மொழி கற்கவேண்டும் என்றால் அது இந்தி மொழியாக இருந்தால் நலமாக இருக்கும் என்றுதான் கூறினேன். இந்தி மொழியை படித்தே தீரவேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. என்று அவர் விளக்கம் கொடுத்ததுடன். தானும் இந்தி மொழியை பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன்தான் என்று அவர் கூறியுள்ளார். இந்தி மொழி அவசியம் என்ற அறிவிப்புக்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அமித்ஷா தன் நிலைபாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
 

click me!