பாஜக.,வுக்கே ஜி.எஸ்.டி. வரி போட்ட குஜராத் வாக்காளர்கள்... அமித் ஷாவுக்கு பெப்பே...!

First Published Dec 19, 2017, 5:46 PM IST
Highlights
Amit shah asked for 150 seats in Gujarat but people gave him 99 after deducting 28 pc GST


நேற்றைய பரபரப்பு குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதுதான். நேற்று முன் தினம் வரை, பாஜக., எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற வாக்குக்குப் பிந்தைய கணிப்புகளில் கூட 115 தொகுதிகளுக்கு மேல் பாஜக., வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் கருத்துக் கணிப்புகளில் 130 தொகுதிகள் வரை பேசப்பட்டது. 

ஆனால், பாஜக., தலைவர் அமித் ஷாவோ, குஜராத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும், குஜராத்தியர்கள் எங்களுக்கு 150 தொகுதிகளைப் பரிசாகத் தருவார்கள் என்றும் கூறியிருந்தார். 

குஜராத்தில் தேர்தலுக்குப் பிந்தைய அனைத்து ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளிலும் பாஜக., வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால் 

காங்கிரஸோ, குஜராத்தில் இம்முறை எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில், அமெரிக்க விளம்பர ஏஜென்சியை அணுகியது காங்கிரஸ். இந்த அரசியல் வியூகங்களை வகுக்கும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தியது. 

இந்த அமெரிக்க ஏஜன்ஸியைக் கொண்டு வந்து அதன் ஆலோசனைகளைப் பெற்று, அது வகுத்த வியூகத்தின் அடிப்படையில் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்.
 அடுத்து வரப் போகும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்த ஏஜென்ஸியே காங்கிரஸின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனமாக செயல்படப் போகிறது. 

இந்த நிறுவனம், எப்படி ஊடகங்களை வளைப்பது, சாதகமான செய்திகளை வெளியிடச் செய்வது,  சமூக வலைதளங்களில் திட்டமிட்டு காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்துவது என பல விஷயங்களில் பரபரப்பாக இயங்கியது. 

மோடியின் மாநிலமான குஜராத்தில் வெற்றி பெற்று விட்டால் 2019 நாடாளுமன்ற  பொதுத் தேர்தலை சந்திப்பது எளிதாக இருக்கும் என்பதால் 
 தேர்தல் முடியும் வரை கடும் முயற்சிகளை மேற்கொண்டது காங்கிரஸ்.

அதனால் தான், இம்முறை மத அடிப்படையில் கிறிஸ்துவ, முஸ்லீம் அமைப்புகளிடம் பகிரங்கமாக ஆதரவு கேட்டது காங்கிரஸ்.

 அவ்வாறு காங்கிரஸுக்கு வாக்கு அளியுங்கள் என்று ஒரு கிறிஸ்துவ சர்ச்சு ஒன்று கட்டளையிட்ட செய்தியையும் பாஜக.,வின் விசுவாசிகள் சிலரைக் கொண்டே வெளியிடச் செய்து, அதையே செய்தியாகப் பரப்பி மக்களின் மனநிலையை மாற்றியது. 

இந்தக் கட்டத்தில்தான் ஹர்திக் படேல் கை கோர்த்தார். அவர் மூலம், ஜாதி அடிப்படையிலும்  ஓட்டு வேட்டை நடத்தப் பட்டது. 

கடும் போட்டி நிலவுவதாகக் காட்டப்பட்டது. காங்கிரஸ் வெற்றி பெறக்கூடும் என்ற மாயை ஊடகங்களில் வெளிப் படுத்தப் பட்டு, வாக்காளர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 

இதுவரை நடந்த தேர்தல்களில் மோடி  முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப் பட்டிருந்தார். இம்முறை மோடி அல்லாத வேறொருவருக்கு  வாக்களிக்க வேண்டிய சூழல் குஜராத் வாக்காளர்களுக்கு.  

என்னதான் ஆட்சி என்றாலும்,  22 ஆண்டு கால தொடர் ஆட்சிக்கு எதிரான மனப் பாங்கு காணப்படுவது இயல்புதானே.

ஏற்கெனவே ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, போன்றவற்றில் மக்களிடம் ஏற்படுத்தப் பட்ட பீதி, அதனால் ஏற்பட்ட தாக்கம் என 

இத்தனை சவால்களையும் மீறி தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக., வெற்றி பெற்றது. 

இது நரேந்திர மோடி என்ற தனிமனித ஆளுமைக்கும், கரிஷ்மா எனப்படும் கவர்ச்சிக்கும் காரணமாக இருந்தாலும்,  பாஜக., பெற்ற இடங்கள் என்னவோ நூற்றுக்கு ஒன்று குறைவாகத்தான். 

இதற்கு பல காரணிகள் அலசப் பட்டாலும், குஜராத்தியர்களின் இயல்பான மன நிலையான வணிக மன நிலையைக் காரணம் சொல்லி, ஒரு கருத்தை சமூக ஊடகங்களில் வளைத்துப் பிடித்து  சுற்றச் செய்கிறார்கள். 

அதாவது, அமித் ஷா கேட்டது, 150 தொகுதிகள்.  ஆனால், எந்தப் பொருளுக்கும் ஜிஎஸ்டி., வரி விதிப்பு காட்டி, அதனால் பாதிக்கப் பட்ட குஜராத் வணிகப் பெருஞ் சமூகத்தினர், குஜராத்தில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தனர். 

அதன்படி, 182 தொகுதிகளுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரியான  28% விதித்தால், அது 51 வரும். 

எனவே, அந்த 28% ஜிஎஸ்டியை, தனக்கு 150 போதும் என்று ஆசைப்பட்டுக் கேட்ட அமித்ஷாவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து, 150 - 51 என கணக்கிட்டு, 99 தொகுதிகளை பாஜக.,வுக்குக் கொடுத்து விட்டனர். 

அந்த வகையில் பாஜக.,வுக்கு குஜராத்தி வணிக சமூகம் மிகச் சரியாக ஜிஎஸ்டி வரி விதித்து, திருப்பிக் காட்டிவிட்டதாம்! 

click me!