
அம்பத்தூர் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி ஆகியோர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய டிடிவி தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து கொண்டே போகிறது.
டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் இணையும் போது ஒ.பி.எஸ் தரப்பில் இருந்தும் மக்கள் தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.
அதையும் மீறி ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்ப்பாளராக நின்றார் டிடிவி தினகரன். அவருக்கு அமைச்சர்களின் ஆதரவும், எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருந்ததால் பணபட்டுவாடா தாராளமாக புழங்கியது.
இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது. மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் சிறைக்கும் சென்றார். இதை பயன்படுத்தி கொண்ட ஒ.பி.எஸ் அணி இ.பி.எஸ் அணியை தன் பக்கம் இழுக்க வசமாக திட்டம் தீட்டியது.
சசிகலா குடும்பத்தை அதிகார பூர்வமாக நீக்கினால் இணைய தயார் என்று அறிக்கையை வெளியிட்டனர் ஒ.பி.எஸ் அணியினர். ஆட்சி நிலைத்தால் போதும் என்ற நோக்கத்தில் இ.பி.எஸ் அணியினர் நாங்களும் தயார் என வாக்குறுதி கொடுத்தனர். தினகரனை அதிமுகவினர் யாரும் பார்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியே அளித்தார்.
ஆனால் விதியை மாற்ற முடியாது என்பது போல என்ன சித்து வேலைகள் போட்டும் கடைசிவரை இரு அணிகள் ஒன்றாக இணையவில்லை.
இதையடுத்து டிடிவி தினகரன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். வெளியே வந்த தினகரனை ஒரு ஒரு எம்.எல்.ஏக்களாக நேரில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.
போக போக இரண்டு நாட்களில் 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் டிடிவியை கட்சியில் இருந்து விளக்கமுடியாத நிலையில் இ.பி.எஸ் அணி தவித்து வருகிறது.
இந்நிலையில், அம்பத்தூர் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி ஆகியோர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.