கொரோனாவைவிட இது மோசமான கொடூரம்...!! நாளை வங்கக் கடலில் உருவாகிறது " ஆம்பன் " புயல்..!!

By Ezhilarasan BabuFirst Published May 15, 2020, 2:14 PM IST
Highlights

சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ முதல் 85 கி.மீ வரை வேகத்தில் வீசும், அதிகபட்சமாக 95 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று இருக்கும் என்றும் இதன் காரணமாக தெற்கு வங்க கடல்,மத்திய வங்க கடல், குமரிக்கடல், லட்சத்தீவுகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும்  அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் .

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில்  அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ,  தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் ,நாளை மாலை அது புயலாகவும் மாறும் எனவும் தெரிவித்துள்ளார் இந்த புயலுக்கு ஆம்பன் என ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது . இந்த புயல்  18ம் தேதி காலை வரை வட மேற்கில் நகரும் பின்னர் திசையில் மாற்றம் பெற்று வட கிழக்காக நகரும்.

இதன் காரணமாக வருகின்ற 18,19 தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ முதல் 85 கி.மீ வரை வேகத்தில் வீசும், அதிகபட்சமாக 95 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று இருக்கும் என்றும்  இதன் காரணமாக தெற்கு வங்க கடல்,மத்திய வங்க கடல், குமரிக்கடல்,லட்சத்தீவுகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.  ஆம்பன் புயல் எதிரொலியாக வடக்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த புயலால் கேரளா கர்நாடக மாநிலங்களில் காற்றின் ஈரப்பதம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!