சமூக நீதி மீது சாக்கடையை அள்ளி வீசிய தயாநிதி... சரக்கும், மிடுக்கும் எங்கே..? வலுக்கும் எதிர்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2020, 2:13 PM IST
Highlights

சமூக நீதியின் மீது சாக்கடையை அள்ளி வீசிவிட்டார் தயாநிதிமாறன் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் விமர்சித்துள்ளார். 
 

சமூக நீதியின் மீது சாக்கடையை அள்ளி வீசிவிட்டார் தயாநிதிமாறன் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் விமர்சித்துள்ளார். 

தி.மு.க. எம்.பி-க்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இந்த மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?", என்று கூறியுள்ளார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி எண்ணம் அவரது மனதில் ஊன்றி இருப்பதையே காட்டுவதாக பலரும் கருதுகின்றனர். தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘சமூக நீதியின் மீது சாக்கடையை அள்ளி வீசிவிட்டார் தயாநிதிமாறன்’ என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன். மற்றுமொரு ட்விட்டர்வாசி பதிவிடுகையில், "திமுக எம்பிக்கள் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா ? என்று கூறியதை எதிர்த்து பேச கூட முடியாமல் தொல்.திருமாவளவன் திமுகவிற்கு வருடி கொடுப்பது 2 எம்பி சீட்டுக்காக. எம்.பி., எம்எல்ஏ சீட்டுக்காக ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும். பூசாத மாதிரியும் இருக்கனும் என்பது திருமாவின் கொள்கை போல", என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க-வின் இளைஞர் அணி துணை தலைவர் எஸ்.ஜி.சூர்யா பதிவிடுகையில், "சரக்கும் இல்லை, மிடுக்கும் இல்லை", என்று விமர்சித்துள்ளார். பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ட்விட்டரில் பதிவிடுகையில், "ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் இந்த அசுர போர்க்குணமே அண்ணனின் இடு செய்ய முடியாத வீரம் பிகு: அதுவும் அந்த "தோழமை சுட்டுதல்" வார்த்தை பட்டால் எதிரி தெறித்து விடுவான் என்பதால் படாமல் அச்சம் தந்த வாளின் வீரிய வீச்சு.. எதிரியை நிலைகுலைய வைக்கும் அண்ணனின் இந்த உக்கிர போர்தந்திரம்", என்று பதிவிட்டுள்ளார்.

click me!