மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

By Raghupati RFirst Published Sep 11, 2022, 4:11 PM IST
Highlights

அண்ணாமலை மாணவியின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அந்த மாணவியிடம் உறுதி அளித்தார்.

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்ததில் இருந்தே, குறிப்பாக தலைவர் ஆன பிறகு தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே ஆக வேண்டும் என்று முயற்சி செய்து எதையாவது செய்து வருகிறார். பல்வேறு பிரச்சனைகளை தேவையில்லாமல் கிளப்பி வருகிறார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டை வைக்கின்றனர். 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. நாடு முழுக்க 7,78,725 கடந்த முறை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் 3570 சென்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

அப்போது பேசிய அவர், ‘நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக விலக்கு கிடைக்கவே கிடைக்காது’ என்று தமிழக அரசை கடுமையாக மேலும் பேசியிருந்தார்.  நீட் தேர்வில் 104 மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவர் அண்ணாமலையிடம் உதவி கேட்டு நேற்று வந்தார். அப்போது மருத்துவ படிப்பு செலவிற்கு உதவி செய்ய முடியுமா ? என்று கேட்டு அவர் அண்ணாமலையை சந்தித்தார். 

அவரை அப்போது அண்ணாமலை வாழ்த்தினார். அப்போது பேசிய அண்ணாமலை மாணவியின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அந்த மாணவியிடம் உறுதி அளித்தார். இதனால் அந்த மாணவியும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது மாணவி கண்ணீர் கண்ணீர்விட்டு அண்ணாமலைக்கு மேடையிலேயே நன்றியும் சொன்னார். அண்ணாமலை காலில் அந்த மாணவி விழுந்தார். 

மேலும் செய்திகளுக்கு..21 ஆண்டுகளுக்கு முன்பு.. இதே நாள்.! உலகையே அதிரவைத்த தீவிரவாதிகள்.. அமெரிக்காவின் கருப்பு தினம்.!

பாஜக தலைவர் அண்ணாமலை காலில் விழுமாறு ஜாடை செய்யும் பாஜக இளைஞரணி தலைவர் அமர்பிரசாத் ரெட்டி.! pic.twitter.com/EoluVFHgum

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

உடனே அந்த மாணவியை தூக்கிவிட்டு அண்ணாமலை, ‘நீங்க படிச்சு இருக்கீங்க, நீங்க சாதிச்சு இருக்கீங்க, நீங்க எல்லாம் காலில் விழ கூடாது’ என்று அறிவுரை கூறினார். தற்போது அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில், ‘மாணவியை காலில் விழ சொல்லி பாஜகவை சேர்ந்த இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டிதான் சிக்னல் கொடுக்கிறார். அவர்தான் கண்ணை அசைத்து சிக்னல் கொடுத்தார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. 

இவர் சிக்னல் கொடுத்த பின்பே அந்த மாணவி காலில் விழுந்தார் என்று புகார் எழுந்துள்ளது. அண்ணாமலை மற்றும் அமர் பிரசாத் ரெட்டிக்கு வேற வேலையே இல்லையா என்றும், படிக்குற பொண்ணை கால்ல விழ வைக்குறது என்ன தான் சொல்றதோ..! என்றும், மாட்டிக்கிட்ட பங்கு என்றும் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். காலில் விழுவது எங்களது கலாச்சாரம் இல்லை என்று அதே சந்திப்பில் அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

click me!