“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

By Raghupati RFirst Published Sep 11, 2022, 3:34 PM IST
Highlights

ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த பயணம் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை 3500 கிமீ தூரம் நடைபெறவுள்ளது. 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் இந்த பயணம் நடைபெறும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளது. ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற ஒரு டி-சர்ட்டின் விலையை குறிக்கும் படம் ஆகும்.  அந்த படத்தில் பர்பரி டி-சர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

இந்த பதிவு வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாக பலர் பதிவிட்டுள்ளனர். ராகுல் காந்தியின் யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்திருப்பதை, அக்கட்சியின் டிவிட்டர் பதிவு காட்டுகிறது என்றும், ராகுல் காந்தி தன்னுடைய பணத்தை தான் செலவு செய்தி வருகிறார் என்றும் கூறி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, ‘கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கமே தமிழகத்தில் பெரும் மாற்றத்தை கொடுத்துள்ளது. எதிர்பார்த்ததை விட லட்சகணக்கான மக்கள் ராகுலை ஆர்வமாக வந்து சந்தித்து அவருடன் இணைந்து நடைபயணம் செல்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..21 ஆண்டுகளுக்கு முன்பு.. இதே நாள்.! உலகையே அதிரவைத்த தீவிரவாதிகள்.. அமெரிக்காவின் கருப்பு தினம்.!

அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமில்லாமல், இந்திய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான நடைபயணம் இதுவாகும். நடை பயணத்தின் போது ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி-சர்ட் திருப்பூரில் தயாரான சாதாரண டிசர்ட் தான். திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் நடைபயண நிகழ்ச்சியில் பங்கு பெறுவோர்களுக்கு வழங்குவ தற்காக 20 ஆயிரம் டி-சர்ட்டுகள் தயாரித்தோம். 

அதைத்தான் அணிந்துள்ளனர். ராகுல் காந்தி அணிவதற்காக படங்கள் இல்லாமல் நான்கு டி-சர்ட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ராகுலின் எளிமை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதை களங்கப்படுத்துவதற்காக இந்த விஷயத்தை பாஜக கையிலெடுத்து தவறான பரப்பி வருகின்றனர். ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் மாபெரும் வெற்றி பயணமாக தொடங்கியுள்ளது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!

click me!