டீ செலவு மிச்சமா.. டீசல் செலவு மிச்சமா? அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த ஆளூர் ஷாநவாஸ்.!

Published : Apr 15, 2022, 07:35 AM IST
டீ செலவு மிச்சமா.. டீசல் செலவு மிச்சமா? அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த ஆளூர் ஷாநவாஸ்.!

சுருக்கம்

தமிழ் புத்தாண்டை அடுத்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த விருந்தை ஆளும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக  உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. பாஜக மற்றும் அதிமுக மட்டுமே இந்த விருந்தில் பங்கேற்றன.

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணியினர் புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என அண்ணாமலை கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார். 

புறக்கணிப்பு

தமிழ் புத்தாண்டை அடுத்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த விருந்தை ஆளும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக  உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. பாஜக மற்றும் அதிமுக மட்டுமே இந்த விருந்தில் பங்கேற்றன.

ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்

இந்நிலையில், புறக்கணிப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு.  தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு என்பதற்காக மாண்பு கருதியே திமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே படித்தார் ஆளுநர். அப்போது மாண்பு இருந்தது, இப்போது இல்லையா. அனைத்தையும் அரசியல் செய்ய வேண்டும் திமுக நினைக்கிறது. ஆளுநர் 11 மசோதாக்களையும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதை திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா?" என்று பதிலளித்திருந்தார்.

மேலும், அண்ணல் அம்பேதகர் வைத்து தான் அரசியல் செய்ய முடியும் என இருக்கும் தலைவர்களை திருத்த முடியாது. அம்பேதகர் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி பாஜக. ஒரு போதும் வன்முறைக்கு, வன்முறைக்கு தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டும் அளவில் அமைதியின் வழியில் செல்கிறோம் என்றார். 

ஆளூர் ஷாநாவஸ் பதிலடி

அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார். "பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க;- தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்..! திமுகவை கடுமையாக தாக்கிய அண்ணாமலை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!