நீட் விலக்கு மசோதா விவகாரம்... ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!!

Published : Apr 14, 2022, 09:54 PM IST
நீட் விலக்கு மசோதா விவகாரம்... ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!!

சுருக்கம்

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை இதுவரை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பா் 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டு ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.

இந்நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இருமுறை நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் கலந்துகொள்வது முறையாக இருக்காது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

லட்சத்தீவில் பாகிஸ்தானை ஓடவிட்ட ஆற்காட்டின் இரட்டை நட்சத்திரங்கள்..! வரலாற்று சாதனை ஏ.ஆர்- ஏ.எல் முதலியார்கள்..!
திமுக ஆமை..! நாங்கள் குதிரை..! அதிமுக பற்றி ரகுபதிக்கு என்ன கவலை...? ஜெயக்குமார் பதிலடி..!