முதல்வர் இப்படிச் சொல்லலாமா? முதல்வர் பதவிக்கு இது அழகா..? நயினார் நாகேந்திரன் அட்டாக்..!

Published : Apr 14, 2022, 09:06 PM IST
முதல்வர் இப்படிச் சொல்லலாமா? முதல்வர் பதவிக்கு இது அழகா..? நயினார் நாகேந்திரன் அட்டாக்..!

சுருக்கம்

தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் விருப்பப்பட்டால் மட்டும் இந்தியை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஆகும். 

மத்திய அரசு தமிழக மக்கள் மீது இந்தியைத் திணிப்பது போன்ற மாயையை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

மோடியுடன் ஸ்டாலின் சந்திப்பு

மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்படி ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக திருச்சி வரகனேரியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் வந்திருந்தார். அந்தப் பணியைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி தமிழக மக்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்

அந்த நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர தமிழக பாஜகவும் முயற்சி மேற்கொள்ளும். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் பேசியபோது ஒரு கருத்தை சொன்னார். அது தவறு என்றால்,  ‘அப்படி பேசக் கூடாது, அது மரபு இல்லை’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக எம்எல்ஏவை எச்சரித்து பேசியது அவசியம் இல்லை. அந்தப் பேச்சு முதல்வரின் தகுதிக்கு அழகல்ல. தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுப் போனது. அன்று காங்கிரஸ் கட்சி தோல்வியடைய இந்தி திணிப்பும் ஒரு முக்கிய காரணம். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் இல்லை.

பாஜகவின் நிலைப்பாடு

தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் விருப்பப்பட்டால் மட்டும் இந்தியை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஆகும். ஆனால், மத்திய அரசு தமிழக மக்கள் மீது இந்தியைத் திணிப்பது போன்ற மாயையை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!