பாமக மற்றும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் விவரம் இதோ..!

By ezhil mozhiFirst Published Feb 20, 2019, 5:26 PM IST
Highlights

நேற்று நடந்து முடிந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜக விற்கு 5 தொகுதிகளும், பாமக விற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

பாமக மற்றும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் விவரம் இதோ..! 

நேற்று நடந்து முடிந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜக விற்கு 5  தொகுதிகளும், பாமக விற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் தற்போது தேமுதிகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. இந்த நிலையில் பாஜக கேட்டுள்ள தொகுதிகள் மற்றும் பாமக கேட்டுள்ள தொகுதிகள் விவரம் கிடைத்துள்ளது.

பாமக கேட்டுள்ள தொகுதிகள் 

கடலூர் 

கிருஷ்ணகிரி

அரக்கோணம்

ஆரணி

தருமபுரி

சிதம்பரம்

கள்ளக்குறிச்சி, ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்..! 

கன்னியாகுமரி

தென்சென்னை

கோவை

திருச்சி

நீலகிரி, 

தேமுதிக உடனான கூட்டணி உறுதியான பிறகு மற்ற கூட்டணி கட்சிகளான பிஜேபி மற்றும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த முழுமையான அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

click me!