
தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளைக் கூடுதலாக அனுப்பும்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழகத்திற்குத் தேவைப்படும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அதிகரித்து வழங்க உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் (mucormycosis) வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இதற்கான ஆம்போடெரிசின்-பி மருந்து (Liposomal amphotericin B14) மருந்து தட்டுப்பாடும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. தயவுசெய்து கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஆம்போடெரிசின்-பி மருந்து சப்ளையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.