
ரஜினியுடன் கூட்டணி இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.*
நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். . தற்போது இருவருமே கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சி கூட்டங்கள் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆனந்த விகடன் வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது என்றும் . அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் கூறியுள்ளார். . நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும் என்றும், இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும் என கமல் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கட்டுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையில் அரசு தனது முதலாளித்துவத்தை காட்டுகிறது என கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தது ரொம்பவே அதிகப்படியான தண்டனை என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக தங்கது கட்சியில் அவர்களை சேர்த்துக் கொள்வோம் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்