இறைவன் பெயரை சொல்லி உளறிய அமைச்சர்...! அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்...!

 
Published : Feb 07, 2018, 06:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
இறைவன் பெயரை சொல்லி உளறிய அமைச்சர்...! அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்...!

சுருக்கம்

AIADMK ministers continue to emerge among the people.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபம் இறைவனால் பாதுகாக்கப்படுள்ளது என்பதற்கு பதிலாக இறைவனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கடந்த 2 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் இரவு 10.30 மணிக்கு ஏற்பட்ட திடீர்  விபத்து பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.

மேலும் வண்ண பூச்சுகள், அழகிய தூண்கள், கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை அழிந்துபோயின. பசுபதீஸ்வரர்  சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது. கோவில் வளாகத்துக்குள் உள்ள கடை ஒன்றில் ஏற்றப்பட்ட கற்பூரம்தான் இந்த விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபம் இறைவனால் பாதுகாக்கப்படுள்ளது என்பதற்கு பதிலாக இறைவனால் பாதிக்கப்பட்டுள்ளது என பேசியது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக அமைச்சர்கள் செய்தியாளர்களுக்கு அளிக்கும் பேட்டியின் போதோ பொதுமேடையில் பேசும் போதோ தொடர்ந்து உளறி வருவது மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக வெளிப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!