சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? விஜயபிரபாகரன் பரபரப்பு தகவல்..!

Published : Feb 03, 2021, 03:00 PM IST
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? விஜயபிரபாகரன் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

திருச்சிக்கு வருகை தந்த விஜயபிரபாகரன் சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபிரபாகரன்;- தேமுதிக இதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்று ஏற்றுக்கொண்டால் தேமுதிக தலைமையில் 3வது அணி அமையும். 

எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட நிலையிலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. அதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றுவார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி.தினகரன், ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருமே தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும். ஒருவேளை தேமுதிகவை இணைக்க வேண்டும் என்ற தேவை திமுகவிற்கு இருக்கலாம். கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. மக்கள் நலன் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி என விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!