பாஜகவுடன் கூட்டணி... ரிவர்ஸ் அடித்து தெறிக்க விடும் அதிமுக எம்.பி..!

By Thiraviaraj RMFirst Published Mar 26, 2019, 6:20 PM IST
Highlights

அதிமுகவில் உள்ள முஸ்லீம்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும் என ராமதாபுரம் எம்.பி., அன்வர் ராஜா பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுகவில் உள்ள முஸ்லீம்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும் என ராமதாபுரம் எம்.பி., அன்வர் ராஜா பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழகத்தில் பாஜவோடு கூட்டணியே சேரக்கூடாது என அதிமுகவில் அதிகமாக முட்டுக்கட்டை போட்டார் ராமநாதபுரம் சிட்டிங் எம்பி அன்வர் ராஜா. இந்த முறை தனக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்று மறைமுகமாக, ‘கட்சியை விட்டு வெளியேறுவேன்’ என்றெல்லாம் எச்சரித்தார். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடந்த பாஜ வேட்பாளர் நயினார்நாகேந்திரன் அறிமுக கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, ‘‘ஜெயலலிதா இறந்தவுடன், கட்சியை காப்பற்றியது பாஜதான். இதற்காக வெங்கையாநாயுடுவை அனுப்பி வைத்து, புதிய முதல்வராக ஓபிஎஸை வழிமொழிந்து, ஆட்சியை காப்பாற்றியதற்கு பாஜவிற்கு அதிமுக என்றும் கடமைப்பட்டுள்ளது. தற்போது இந்த கூட்டணி, ரயில் பயண கூட்டணி. ஸ்டேஷன் வந்தால் இறங்கி போவது போல், தேர்தல் முடிந்தவுடன் அவரவர் வேலையை பார்க்க போகலாம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிற்கு வலிமையான தலைவர் இல்லை. அதிமுகவில் உள்ள முஸ்லீம்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும். மற்றவர்களிடம் ஓட்டு கேட்க வேண்டாம்’’ எனக் கூறினார். இப்படி அன்வர்ராஜா பேசியதை  கண்டு வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மேடையில் இருந்த கூட்டணி கட்சியினர் அனைவரும் அதிருப்தி அதிர்ச்சியாகி விட்டார்கள். கட்சியின் தற்போதைய சூழ்நிலையை சொல்கிறாரா? அல்லது தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் இப்படி பேசுகிறாரா? எனத் தெரியாமல் முணுமுணுத்துக் கொண்டு கூட்டம் முடிந்தும் குழப்பத்தில் சென்றனர். 

click me!