கூட்டணிப்பேச்சுவார்த்தை ஆரம்பம்... முதல்வரை சந்திக்கும் எல்.முருகன்..!

By Thiraviaraj RMFirst Published Oct 9, 2020, 6:14 PM IST
Highlights

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய பிரச்னை ஓய்ந்திருப்பதால் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்க முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று மாலை சந்திக்க உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதை தொடர்ந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் எழுந்து வருகின்றன. அதாவது, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என்றும் அதிமுக- பாஜக இடையே பிரச்னை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அதிமுக -பாஜக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது.

வரும் தேர்தலுக்கான கூட்டணி இனிமேல் தான் அமைக்கப்படும்.’ என கூறியிருந்தார். இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்க பாஜக எல்.முருகன் முதல்வர் பழனிசாமியை சந்திக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய பிரச்னை ஓய்ந்திருப்பதால் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

click me!