இதெல்லாம் அண்ணாமலையின் பலவீனம்... வாயில் வந்ததைப் பேசும் பாஜகவினர்.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய திருமாவளவன்!

Published : Oct 25, 2021, 09:31 PM IST
இதெல்லாம் அண்ணாமலையின் பலவீனம்... வாயில் வந்ததைப் பேசும் பாஜகவினர்.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய திருமாவளவன்!

சுருக்கம்

பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி தரப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அவரது பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை மிகத் தீவிரமாக விமர்சித்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. இதில் ஒரு படி மேலே போய்,  ‘பாஜக மீது திமுக கை வைத்தால், அதற்கு வட்டியும் முதலுமாக பாஜக திருப்பிக் கொடுக்கும்’ என்று காட்டமாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அண்ணாமலையும் பாஜகவினரும் தமிழக அமைச்சர்களின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்தார். “கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் பாஜகவினர் பேசி கொண்டிருக்கிறார்கள். பாஜகவினர் உருப்படியான அரசியலை பேசுவதே இல்லை. தங்களை அனைவரும் கவனிக்க வேண்டும், தங்களைப் பற்றியே விவாதிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி தரப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அவரது பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.” என்று திருமாவளவன் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!