மொத்த ரவுடி பசங்களும் பாஜகவில் தான் இருக்காங்க!பிரதமருக்கான எல்லா தகுதியும் இபிஎஸ்-க்கு இருக்கு! செல்லூர் ராஜு

By vinoth kumar  |  First Published Oct 28, 2023, 12:06 PM IST

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தது.


மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட்  தலைவர்கள் உருவாகி வருகின்றனர் என அண்ணாமலையை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். 

அதிமுக 52வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையத்தில் அதிமுக சாதனை விளக்க  பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய செல்லூர் ராஜு;- அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது அல்வா கொடுத்துள்ளனர் திமுகவினர். ஆனால் அதிமுக அரசு அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் அதேபோன்று அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலை இல்லா அரிசி என பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கினோம். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- உங்க அப்பா.. கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை.. நீ எல்லாம் எம்மாத்திரம்.. செல்லூர் ‌ ராஜூ சரவெடி.!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகள் மூடப்படும் என்றும், ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் கிடைக்காது என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். நம்ம செந்தில் பாலாஜி அதனை தொடங்கி வைத்தார். தற்போது முத்துசாமி தொடர்ந்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை? என கேள்வி எழுப்பினார். 

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தது. அதனாலேயே 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று இதன் மூலம் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் இலவசமாக மருத்துவம் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

இதையும் படிங்க;-  பசும்பொன்னுக்கு இபிஎஸ் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.! மனுவை பார்த்து அலறிய மாவட்ட ஆட்சியர்..!

மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட்  தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். இந்திய ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகலாம் எந்த அளவுகோலும் இல்லை.  எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக கூடாது. அன்றைக்கு மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்து. எனவே எடப்பாடியார் பிரதமர் ஆக முழு தகுதியும் கொண்டவர் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

click me!