
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேர்தலின் போது வாக்கு இயந்திரங்களை விட வாக்கு சீட்டு முறையே பின்பற்ற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காரணம், வாக்கு இயந்திரங்கள் முறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்பதை யாராவது நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
விரைவில் வெளிப்படையான சவாலை தேர்தல் ஆணையம் விடுக்கும் என தெரிவித்துள்ளார்.
ஒப்புகை சீட்டு முறை அனைத்து தேர்தல்களிலும் கொண்டு வர தேர்தல் ஆணையம் முனைப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.