முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த தோப்பு வெங்கடாசலம் - கடுப்பில் எடப்பாடி குழு

 
Published : Apr 29, 2017, 06:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த தோப்பு வெங்கடாசலம் - கடுப்பில் எடப்பாடி குழு

சுருக்கம்

Ignoring the event which was attended by Chief Minister Edappadi Thoppu Venkatasalam participated in another event

முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றதால் எடப்பாடி குழுவினர் செம்ம கடுப்பில் உள்ளார்களாம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம். முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது தோப்பு வெங்கடாசலம் சுற்று சூழல் துறை அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கபட்டிருந்தபோது இவரும் தங்கி இருந்தார்.

அங்கு சசிகலா ஆதரவு அமைச்சர்களுக்கும் இவருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நடைபெற்றதாக தெரிகிறது.

இதையடுத்து அமைச்சர்கள் நடத்திய ஆய்வு கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை.

பின்னர், சென்னையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவிலும் இவர் பங்கேற்காதது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றதால் எடப்பாடி குழுவினர் செம்ம கடுப்பில் உள்ளார்களாம்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்