நாளை ஆக்சிஜன் வந்தவுடன் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்படும். மா. சுப்ரமணியன்.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2021, 2:36 PM IST
Highlights

மொத்தமாக 1600 படுக்கையும் நிரம்பிவிட்டது.  சாதாரண படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரே நேரத்தில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் வருவதால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.   

80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளை சென்னைக்கு வந்த உடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். மருத்துவமனை முதல்வர், மருத்துவர்களிடம் கேட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1200 ஆக்சிஜன் படுக்கை நிரம்பியதால் தான் ஆம்புலன்ஸில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மொத்தமாக 1600 படுக்கையும் நிரம்பிவிட்டது.  சாதாரண படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரே நேரத்தில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் வருவதால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.  அதேபோல் தனியார் மருத்துவமனையும் நோயாளிகளை ஒரே நேரத்தில் அனுப்பிவிடுகின்றனர். 

இன்னும் 2 நாளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அனைத்து படுக்கைகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல் 
80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டுவிட்டது. நாளை காலை  சென்னை வந்தடையும். இதன் மூலம் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் என்றார். தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசே நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் உலகளாவிய  ஒப்பந்தம் செய்ய இருக்கின்றோம்.

அனைத்து தடுப்பூசிகளும் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ரெம்டெசிவர் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் அனைவருக்கும் கிடைக்க தான் நெல்லை, சேலம், மதுரை உள்ளிட்ட மையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 21 ம் தேதிக்கு பிறகு ரெம்டெசிவர் மருந்து கூடுதலாக சென்னைக்கு வரும். தனியார் மருத்துவமனையில் கொரோனா படுக்கை கூடுதலாக உருவாக்க அறிவுறுத்தல் செய்துள்ளோம். இதன் மூலம் நெருக்கடி சில நாட்களில் குறையும் என்றார். மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடன் இருந்தனர்.
 

click me!