கிளம்பிய வாகனங்கள் !! அணி திரளும் அழகிரி ஆதரவாளர்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 4, 2018, 8:36 PM IST
Highlights

மு.க.அழகிரி தலைமையில் நாளை மெரினாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேரணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் அழகிரி ஆதரவாளர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததில் இருந்தே அக்கட்சிக்கு எதிராக முக.அழகிரி பேசி வருகிறார். கருணாநிதி இறந்த மூன்றாவது நாளே அவரது சமாதியில் பேட்டி அளித்த அழகிரி தன்னுடன்தான் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என கொளுத்திப் போட்டார்.

மேலும் கருணாநிதி மறைந்த 30 ஆவது நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அதாவது நாளை சென்னையில் லட்சம் பேர் பங்கேற்கும்  பேரணி ஒன்றை நடத்த்ப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித எதிர்ப்பும் இன்று ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படடார்.

அதே நேரத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்துவது குறித்து அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது எதையுமே ஸ்டாலின் கண்டு கொள்ளவிலலை. இதையடுத்து நாளை பேரணி உறுதியாக நடைபெறும் என அழகிரி அறிவித்தார். அதன்படி நாளை பேரணி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகர் முழுவதும் அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர்களால் ஜொலிக்கிறது.

இதனிடையே நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த பேரணியில் பங்கேற்பதற்காக மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அழகிரி ஆதரவாளர்கள் ஏராளமானோர் அந்த வாகனங்களில் உற்சாகமாக முழக்கமிட்டபடி சென்னை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர்

click me!