தமிழிசைக்கு ஜெயலலிதான்னு நெனப்பு !! இவங்க என்ன மகாராணியா ? வெளுத்து வாங்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் !!

Published : Sep 04, 2018, 07:38 PM ISTUpdated : Sep 09, 2018, 07:56 PM IST
தமிழிசைக்கு ஜெயலலிதான்னு நெனப்பு !! இவங்க என்ன மகாராணியா ? வெளுத்து வாங்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் !!

சுருக்கம்

தமிழக பாஜ தலைவர் தமிழிசை தன்னை மகாராணி போலவும், குட்டி ஜெயலலிதா போலவும் நினைத்துக் கொள்கிறார் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்  அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாசிச  பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை அடுத்து,  தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். 

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா  என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்ப்பட்டது.

ஆனால் சோபியா இன்று நண்பகலில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்சன்கள் இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் டரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

அனைத்து வலைதளங்களிலும் பாசிச பாஜக ஒழிக என்ற ஸ்லோகன் தான் காணப்பட்டது.அதே நேரத்தில் ஒரு மூத்த தலைவர் பொது இடத்தில் பக்குவமாக நடந்திருக்க வேண்டும் என்றும் மாணவி சோபியாவை அழைத்து தனது விளக்கத்தை அளித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அந்த மாணவி மீது புகார் அளித்து, அவரை சிறையில் தள்ளி இருக்க வேண்டாம் என பரவலாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழிசை ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பொது வாழ்வு என்று வந்துவிட்டால், சில சங்கடங்களை தாங்கித் தான் ஆக வேண்டும் என கூறினார். தமிழிசை தன்னை மகாராணி போலவும், குட்டி ஜெயலலிதா போலவும் நினைத்துக் கொள்கிறார் என்று கிண்டல் செய்தார்.

 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!