
மாணவி சோஃபியாவின் கைது மற்றும் ஜாமீன் குறித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்,
அ.எண் : 172 / 2018
தேதி : 04.09.2018
"நமது தேசத்தில் அனைவருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் உள்ளது. அதேசமயம் எந்த இடத்தில் நமது உரிமைகளை கையாளுகிறோம் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. மாணவி சோஃபியா விமானத்தில் கோஷமிட்டதாக அறியப்படும் செய்தி, உடன் பயணிக்கும் வெவ்வேறு கருத்துடையவர்களிடம் குழப்பநிலையை உருவாக்கலாம். கண்டிப்பாக ஒருவரது உரிமையை வெளிப்படுத்தும் இடம் அது அல்ல.
இச்சம்பவத்திற்காக, மாணவி சோஃபியாவை கைது செய்ததை தவிர்த்து, எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கலாம். எனினும், தற்போது ஜாமீன் கிடைத்திருக்கும் சூழ்நிலையில், மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவியின் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.
நன்றி,வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்
ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்