hijab row: அவங்களுக்கு தெரியாது... இந்திய முஸ்லீம்களுக்கு நல்லாவே தெரியும்... அசாம் முதல்வர் அதிரடி..!

By Kevin KaarkiFirst Published Apr 7, 2022, 11:26 AM IST
Highlights

hijab row: கர்நாடக மாநிலத்தின் ஹிஜாப் விவகாரம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா கருத்து தெரிவித்து இருக்கிறார்.

கர்நாட மாநிலத்தில் மீண்டும் ஹிஜாப் விவகாரம் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த கர்நாடக மாநில மாணவி முஸ்கான் எனும் மாணவியை இந்திய மாணவர்கள் சூழ்ந்து ஜெய்ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹூ அக்பர் என கூறினார். 

பாராட்டு:

இந்த சம்பவம் அடங்கிய வைரல் வீடியோ குறித்து அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி 8 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கர்நாடக மாணவி முஸ்கானுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் உள்விவகாரத்தில் அல் கொய்தா தலையிட்ட விவகாரத்திற்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஹிஜாப் விவகாரம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா கருத்து தெரிவித்து இருக்கிறார். "சீருடைகள் பற்றி அல்கொய்தாவுக்கு எதிவும் புரியாது, ஆனால் இந்திய முஸ்லீம்களுக்கு இது பற்றி நன்றாகவே தெரியும்," என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்தார்.

ஹிமாந்தா பிஸ்வா கருத்து:
 
"நீங்கள் ஹிஜாப் அணிந்தால், நான் வேறு எதையாவது ஒன்றை அணிவேன், இவ்வாறு செய்யும் போது பள்ளி மற்றும் கல்லூரி மத வழிபாட்டை வெளிப்படுத்தும் தளமாக மாறிவிடும். இதை வைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் எப்படி ஹிஜாபை அனுமதிப்பது? இதன் காரணமாக தான் இந்து, முஸ்லீம் வேறுபாட்டை களையும் வகையில் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சீருடைகளால் ஏவை மற்றும் பணக்காரர் இடையே வேறுபாடு இல்லை," என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்து இருக்கிறார்.   

"அல்கொய்தாவுக்கு இது நிச்சயம் புரியாது, ஆனால் இந்திய முஸ்லீம்கள் சீருடைகளை அணிவதன் அவசியத்தை புரிந்து கொள்வர் என நிச்சம் நம்புகிறேன். பள்ளி மற்றும் கல்லூரி முடிவடைந்ததும், வீட்டிற்கு வந்த பின் நீங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். இந்திய முஸ்லீம்கள் நம் சட்ட விதிகளை பின்பற்றுவர் என உறுதியாக நம்புகிறேன்," என அவர் மேலும் தெரிவித்தார். 

கர்நாடகா ஹிஜாப் விவகாரம்:

கர்நாடக மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் நீதிமன்ற வழக்காக மாறி, தற்போது கர்நாடக மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.

முன்னதாக ஹிஜாப் போராட்டத்தின்போது அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது, சில மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த மாணவி பதிலுக்கு, அல்லாஹூ அக்பர் என தனியே கோஷமிட்டப்படி நடந்து வந்தார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

click me!