எம்.பி. பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்... எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அதிரடி!!

Published : Mar 22, 2022, 09:06 PM IST
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்... எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அதிரடி!!

சுருக்கம்

கர்ஹால் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது எம்பி பதவியை சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். 

கர்ஹால் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது எம்பி பதவியை சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் உ.பி., கோவா, உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், உத்தரப்பிரதேசம் உள்பட மற்ற நான்கு மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையேடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலில் மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக  உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தேர்தலில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சமாஜ் வாதி கட்சித் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்த முறையாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், முன்னாள் முதல்வரும், சமாஜ் வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆனால்  உத்தரப்பிரதேச மாநில 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற்தேர்தலில், பாஜக 255 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை மட்டும் கைப்பற்றியதால் இந்த முறையும் தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் பாஜகவின் தலைமையில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யனாத் முதல்மைச்சர் ஆகியுள்ளார். மேலும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பாஜகவின் எஸ்பி சிங் பாகேலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கர்ஹாலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த எம்எல்ஏ பதவியை இவர் ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தரப்பில் இருப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் சமாஜ்வாதி தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தான், அவர்களையெல்லாம் மகிழ்விக்கும் விதமாக தனது எம்பி பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

சமாஜ் வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில் அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் எஸ்பி சிங் பாகேலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கர்ஹாலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அரசியல் சாசன விதிப்படி, இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது எம்பி பதவியை  ராஜினாமா செய்வதற்கானக் கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலை தொடர விரும்பாத அகிலேஷ் யாதவ், இனி வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, எம்பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி