இந்தியாவின் சிலிப்பூட்டும் தடுப்பூசி வியூகம்.. சவால்கள், சாதனைகளை பட்டியல் போடும் அகிலேஷ் மிஷ்ரா..

By Asianet Tamil  |  First Published May 26, 2021, 8:05 PM IST

கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இரண்டாவது அலையில் தீவிரமும் குறைய தொடங்கியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் போதுமான அளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளின் மூலம் நிச்சயம் அடுத்த சில வாரங்களில் மோசமான இந்த சூழல் முடிவுக்கு வரும் என புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை சி.இ.ஓ அகிலேஸ் மிஷ்ரா கூறியுள்ளார். 


கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி  உற்பத்தி மற்றும் அதை மக்களுக்கு விநியோகிப்பதில் இந்திய அரசு வியத்தகு சாதனை புரிந்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்திய அரசு எடுத்த தடுப்பூசி வியூகம் குறித்து புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை சி.இ.ஓ அகிலேஷ் மிஷ்ரா எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் பின்வருமாறு: 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது, அதில் மிக முக்கியமானது, உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா இருப்பதேயாகும். கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், அரசு பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது. மோடி அரசில், வங்கிக்கணக்கு இல்லாத 423 மில்லியன் மக்கள் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு பெற்றுள்ளனர். அதேபோல் சுமார் 233 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்  சமூக பாதுகாப்பு  திட்டமான ஜன் சுரக்ஷா திட்டத்தின் கீழ் காப்பீடு உரிமை பெற்றுள்ளனர். முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் 288 தொழில்முனைவோருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 2016 நவம்பர் மாதம் டிஜிட்டல் பண பரிமாற்றம் என்ற புரட்சிகரமான திட்டம் தொடங்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இவைகளின் மூலம்  இந்தியா உலகின் மிகப்பெரிய அதாவது, ஒரே மாதத்தில் 25 மில்லியன் அளவுக்கு  பரிவர்த்தனைகளுடன் உலகின் நிகழ்நேர கொடுப்பனவு சந்தையாக உருவெடுத்தது. அதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 80 பில்லியன் டாலர்கள். ஆகும். இதைத்தொடர்ந்து இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை அறிவித்த போது ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இதை இந்தியா எப்படி முன்னெடுத்துச் செல்லபோகிறது.! என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடம் மேலோங்கியிருந்தது. இந்தியா அந்த மாபெரும் தடுப்பூசி திட்டத்தை எப்படி செயல்படுத்தியது, அது எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதை ஆராய்வோம். 

இந்தியாவில் தடுப்பூசி வேகம் உலகளாவிய தரத்தை விட மெதுவாக உள்ளதா.?

2021 மே 25 ஆம் தேதி வரை இந்தியா 196 .4 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இதற்கான நம்பகமான புள்ளிவிவரம் அமெரிக்காவிடம் உள்ளன, ஏனெனில் இந்தியாவை காட்டிலும் அமெரிக்கா மட்டுமே அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடாக உள்ளது. இந்தியாவைவிட ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே அமெரிக்கா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, எனவே தடுப்பூசி வேதத்தைப் பொறுத்த வரையில் உலக அளவில் இந்தியாவே முன்னோடியாக உள்ளது என்றே கூறலாம், வெறும் 114 நாட்களில் 170 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியா நிர்வகித்துள்ளது. அதை அமெரிக்கா 115 நாட்களிலும், சீனா 119 நாட்களிலும் செய்துள்ளன.

இந்தியாவில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை உள்ளதா..?

தடுப்பூசியை சொந்தமாக உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. அதில் கோவாக்சின் என்ற பாரத் பயோடெக்கின் தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது, அதேபோல் கோவிஷீல்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது, அதேபோல் தற்போது ஸ்புட்னிக்-வி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த அளவுக்கு இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவது இல்லை. பல்வேறு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவைவிட பல நாடுகள் மிக குறைந்த வேகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்கின்றன. தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற வாதங்கள் ஒருபோதும் எதற்கும் உதவாது.  ஆனால் நடைமுறை யதார்த்தங்களை பொருத்தவரை இந்தியாவின் தடுப்பூசி பங்குகள் மிக மிக அதிகம், இந்தியாவில் தடுப்பூசிகள் சுத்தமானவை, தரமானவை, உலகிலேயே உயர்ந்தவை. 

ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் அதை பூர்த்தி செய்வதில் பின்தங்கி உள்ளதா..?

தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது மிகக் குறைவு, தடுப்பூசிகளின் தினசரி உற்பத்திக்கும் ஒரு வரம்பு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், இருப்பினும் இந்த உற்பத்தி திறன் கடந்த ஒரு வருடத்தில் பெருகியுள்ளது. ஆனால் அது காலவரையறையின்றி வளர முடியாது. மக்கள் தொகைக்கு ஏற்பவே தரவுகளைப் பயன்படுத்தி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது, ஒரு நாளைக்கு உற்பத்தி செய்வதற்கான வரையறுக்கப்பட்ட திறன் உள்ளது. இந்திய மக்கள் தொகை என்பது மிகப்பெரியது, மக்கள் தொகையில் இந்தியாவுக்கு அடுத்து உள்ள நாட்டின் மக்கள்தொகை விட ஐந்து மடங்கு பெரியது. இப்படி அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு மருந்து வினியோகம் செய்வது என்பது சவாலானது. இந்தியா தடுப்பூசியை எந்த அளவிற்கு உற்பத்தி செய்து விநியோகிக்கிறது என்பதை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போதே சரியாக அளவிட முடியும். ஜனவரி 16,2021 முதல் இந்தியா தனது தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது. சீனா இதுவரை 1,135 மில்லியன் டோஸ்களை வழங்கியுள்ளது. இதில் 17.3 சதவீதம், அதாவது 196.4 மில்லியன் டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. 

இந்தியா போதுமான தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்ததா.?

முதலாவதாக தங்கள் சொந்த மண்ணில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யாத நாடுகள் தடுப்பூசி  இறக்குமதியை சார்ந்துள்ளன. எனவே அவர்கள் தடுப்பூசியை முன்கூட்டியே பெறுவது அவசியம். ஆனால் இந்தியா அப்படி அல்ல. இந்தியாவில் ஸ்பூட்னிக்-வி அங்கிகரிக்கப்படும் வரை உள்நாட்டு தடுப்பூசியே பயன்படுத்தபட்டது. இரண்டாவதாக பெரும்பாளான நாடுகள் தொற்றுநோயின்போது தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தன. எனவே முன்கூட்டியே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, தேவையான அளவு தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உதாரணமாக கனடா ஏற்கனவே 336 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை ஆர்டர் செய்தது. ஆனால் மே-24 நிலவரப்படி  அவர்களால் 21 மில்லியன் டோஸ் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதே நேரத்தில் இந்தியா ஏற்கனவே 19 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை  வழங்கியுள்ளது. ஆனால் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியா தற்போதைக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

 

இந்தியாவின் ஆர்டர்கள் இல்லாததால் என்ன பிரச்சனை.? 

உண்மை என்னவென்றால்  உள்நாட்டில் மாதம்தோறும் மில்லியன் கணக்கான தடுப்பூசி அளவை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது மற்றும் ஏற்றுமதிகள் தடைசெய்யப்பட்ட நிலையில் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் தயாரிக்கும் ஒவ்வொரு டோசும் இயல்பாகவே இந்தியாவால் ஆர்டர் செய்யப்பட்டது, ஏற்றுமதி தடை மூலம் இந்திய அரசு ஏற்கனவே தனது சொந்த மக்களுக்காக 2 பில்லியன் ஷாட்டுகளை ஆர்டர் செய்துள்ளது.

இந்தியா ஏன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது.?

இந்தியா தனது சொந்த குடிமக்களுக்கு 196 .4 மில்லியன் அளவுகளை வழங்கியுள்ளது. அதேபோல் 66 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி அளவுகள் ஏற்கனவே அதன் ஏற்றுமதியை விட மூன்று மடங்கு அதிகம், இந்த ஏற்றுமதியில் 10 மில்லியன் மட்டுமே பிற நாடுகளுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நாடுகளில் பல ஏழை நாடுகளும், உள்நாட்டு உற்பத்தி திறன் அற்ற நாடுகளாகும். அந்த நாடுகளுக்கு உதவ வேறு யாரும் முன்வராத நிலையில் இந்தியா அவர்களுக்கு தடுப்பூசி வழங்கியது. இந்த நாடுகள் எப்போதும் உலக அளவில் இந்தியா எழுப்பும் பிரச்சனைகளுக்கு ஆதரவாக துணை நிற்கக்கூடிய நாடுகளாகும், பெரிய நாடுகள் கூட அந்த நாடுகளுக்கு உதவ வில்லை. ஆனால் இந்தியா உதவியது.  

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட மொத்த 66 மில்லியனில் சுமார் 35 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் ஒப்பந்தங்கள் அடிப்படையில் அனுப்பப்பட்டன. ஏறக்குறைய 20 மில்லியன் அளவுக்கு கோவேக்சின் வழங்கப்பட்டன. இது ஏழை நாடுகள் மற்றும் அதிகம் பாதிக்க கூடிய எளிய மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வழியற்ற மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும், அதற்கு நாம் உதவினோம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவின் பெரும்பாலான தடுப்பூசி ஏற்றுமதிகள், சுகாதார பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட போதே அவைகள் அனுப்பப்பட்டன. எப்படி இருந்தாலும் அப்போதைக்கு  தடுப்பூசிகள் இந்தியாவில் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்தியா 2வது அலையை எதிர் கொண்டபோது உடனே தடுப்பூசி ஏற்றுமதியை அரசு நிறுத்தியது. அதை உலக நாடுகளும் புரிந்து கொண்டன. 

இரண்டாவது அலை இந்தியாவில் உச்சம் அடைந்த போது சில நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்தன, ஆனால் இரண்டாவது அலையைத் இந்தியா சுயமாகவே எதிர்கொண்டது, இந்தியா தனது உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது, அதேநேரத்தில் அதற்கான மூலப்பொருட்கள் பல வெளிநாடுகளில் இருந்து வரவேண்டியிருந்தது, பல வெளிநாடுகளுக்கு நாம் அனுப்பிய தடுப்பூசிகளை அப்போது அரசு தடுத்து நிறுத்தியிருந்தால் இரண்டாவது அலையின் போது இந்தியாவுக்கு உதவ அந்நாடுகள் முன் வந்திருக்குமா.? வெளிநாட்டிற்கு செல்ல இருந்த தடுப்பூசிகளை தடுத்து நிறுத்தியிருந்தால் பல்வேறு நாடுகள் மூலப்பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பியிருக்குமா.? இப்படி தடுப்பூசி திட்டம் (தடுப்பூசி மைத்திரி) குறித்து எழுப்பப்படும் கேள்விகள், அதில் உள்ள நுணுக்கங்கள் சர்வதேச யதார்த்தங்களை புரிந்து கொள்வதிலேயே உள்ளது. 

தடுப்பூசி உற்பத்தி திறன் ஏன் அதிகரிக்கப்படவில்லை.?

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி கடந்தாண்டு தொடங்கியது, இந்த குறுகிய காலத்தில் உற்பத்தி திறன் பெருக்கப்படலாம்  என்றாலும், அதை எல்லையற்ற நிலைகளுக்கு கொண்டு செல்ல முடியாது. இந்த சூழ்நிலையில் உற்பத்தி திறனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

எனவே திறன் விரிவாக்கம் என்ன.?

திறன் விரிவாக்கத்தில் பிரதமர் மோடி முதலீட்டாளர், இன்குபேட்டர், மதிப்பீட்டாளர், வாங்குவோர், உற்பத்தியாளர் போன்றவர்களை ஒழுங்கிணைத்ததன் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த முடிந்தது. உற்பத்தியை அதிகரிக்க பொருளாதார அடிப்படையிலும் அனைத்து  உற்பத்தியாளர்களுக்கும் நிதிநிறுவன ஒழுங்குமுறை மற்றும் சட்ட உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம்  ஜூலை 2021 இறுதிக்குள் 510 மில்லியன் டோஸ்களை நிர்வகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அதேபோல்  2021 ம் ஆண்டு இறுதிக்குள் 2.16 பில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இடையே கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயோடெக்- கோவாவின் உற்பத்தியாளர் மற்றும் டாக்டர் ரெட்டியின் ஆய்வாகங்கள் மற்றும் ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கான உரிமம் பெற்றவர் என இணைந்து உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எப்டிஐ போன்ற சர்வதேச மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்தவுடன் புதிய தடுப்பூசிகள் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் விரைவாக தடம் பதிக்க உள்ளன. இந்தக் கூட்டு முயற்சியின் மூலம் 2.16 பில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

தடுப்பூசி இயக்கத்தின் தற்போதைய நிலை என்ன.?

விஞ்ஞான நெறிமுறைகளின்படி இந்தியாவின் தடுப்பூசி  இயக்கம் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது. உலகச் சுகாதார அமைப்பின் நெறிமுறைகளின் படி உயிரிழப்பை தடுத்தல், நோய் தொற்றை கட்டுப்படுத்துதலே இதன் நோக்கம்.

அதன்படி ஜனவரி 16 முதல் 31 வரை சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது, பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 28 வரை முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது, மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களில் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 28.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

இந்திய அரசு இதற்காக பொது மையத்தை உருவாக்கி உள்ளது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்திய மக்களுக்கு வழங்கப்படும், அதை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக மக்களுக்கு வழங்கும், ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் எப்போதும் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை அது உறுதி செய்யும். அதே நேரத்தில் மீதமுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும், உள்ளூர் தேவைகள், முன்னுரிமைகளுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும்.

அடுத்தது என்ன.? 

ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உற்பத்திக்கு கூடுதலாக, வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உடனான  பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது. அமெரிக்கா எஃப்.டி.ஏ போன்ற கட்டுப்பாட்டாளர்களால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டால் அவர்களுக்கு அவசர ஒப்புதல் வழங்கப்படும். அப்படி அங்கீகரிக்கப்பட்டால் உள்ளூர்  சோதனைகள் நடத்தப்படும், இதற்கிடையில் பாரத் பயோடெக் 18  வயதுக்குட்பட்டவர்களுக்கு  அதன் கோவேக்சின் தடுப்பூசியை பரிசோதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா அதன் உற்பத்தி திறன் மற்றும் தடுப்பூசி கொள்முதல் திட்டங்கள் மூலம் போதுமான அளவிற்கு தடுப்பூசி செலுத்தும் பாதையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இரண்டாவது அலையில் தீவிரமும் குறைய தொடங்கியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் போதுமான அளவு இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளின் மூலம் நிச்சயம் அடுத்த சில வாரங்களில் மோசமான இந்த சூழல் முடிவுக்கு வரும். இவ்வாறு அகிலேஷ் மிஷ்ரா தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

எழுத்தாக்கம்- அகிலேஷ் மிஷ்ரா, சி.இ.ஓ , புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை. 

 

click me!