3 வது முறையாகவும் அதிமுகவுக்கே வெற்றி .. வில்லிவாக்கத்தில் திமுகவை திணறவைக்கும் ஜெசிடி பிரபாகரன்.

Published : Mar 26, 2021, 06:01 PM IST
3 வது முறையாகவும் அதிமுகவுக்கே வெற்றி .. வில்லிவாக்கத்தில் திமுகவை திணறவைக்கும் ஜெசிடி பிரபாகரன்.

சுருக்கம்

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் அத்தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப் பகுதியில் உள்ள தெருக்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் .

மக்களின் வரவேற்பை பார்க்கும்போது நிச்சயம் மூன்றாவது முறையாக நான் வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக வில்லிவாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். 

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் அத்தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப் பகுதியில் உள்ள தெருக்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று காலை ஐ.சி.எப் கமலா விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு இன்றைய பிரசாரத்தை தொடங்கினார். 

ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியமையால் அந்த கடந்த காலங்களில் செய்த நலத்திட்டங்களுக்கு நன்றிக்கடனாக வாக்காளர்கள் நிச்சயம் என்னை மீண்டும் இந்த தொகுதியில் வெற்றி பெற செய்வார்கள் என்றும், இந்த முறையும் மீண்டும் வெற்றி பெற்றால் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சமூக நலக்கூடங்களை, நவீனமயமாக்குவது,  வில்லிவாக்கம் பகுதி முழுவதும் பைப் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை நிறைவேற்றி தருவேன் என்றார். 

நிச்சயமாக அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும், மீண்டும் வில்லிவாக்கம் தொகுதியில் நான் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?