மதுரை மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியே ஆகனும்.. உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி உறுதி.. செல்லூர் ராஜூ ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 8:29 AM IST
Highlights

எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக படுதோல்வியடைவது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக படுதோல்வியடைவது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாநகர் மாவட்டம் மத்திய பகுதி சார்பில் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- 

தேர்தலுக்காக திமுக ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது, ஆனால் தற்போது வரை அவைகள் நிறைவேற்றப்படவில்லை, அதைக் கேட்டு மக்களுக்காக நாம் போராடினால், நம் மீது அவர்கள் வழக்குப் போடுகிறார்கள். முதலில் நான் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நாமெல்லாம் அம்மாவின் பிள்ளைகள், ஒருபோதும் வழக்குகளை கண்டு அஞ்சி ஓடமாட்டோம். இந்த இயக்கம் ஒவ்வொரு தொண்டரின் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது மதுரைக்கு மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுக தொடங்கிவைத்த முல்லைப் பெரியாறு அணை லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் மதுரையில் உள்ள மக்களின் தாகத்தைத் தீர்த்துள்ளது. இன்னும் கூட கூடுதலாக மதுரையில் 35 லட்சம் மக்கள் வந்தாலும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும், எனவே எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதுரை நகர் மாநகர மேயர் பதவியை நாம் கைப்பற்ற வேண்டும். இதை பிடித்தால்தான் மீதமுள்ள அனைத்து திட்டங்களையும் தொடங்கி வைக்க முடியும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட வேண்டும், வரும் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

 

click me!