தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் அது நடக்காது! எங்க கூட்டணிக்கு அதிமுக வரலனா இதுதான் நடக்கும்.. ராம சீனிவாசன்

By vinoth kumar  |  First Published Jan 28, 2024, 3:28 PM IST

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக கடந்தாண்டு அக்கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டது. இது தேர்தல் நாடகம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். 


2019, 2021- பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, இப்போது பசுத்தோல் போர்த்திய புலிபோல் இருந்தால் அதை நம்ப மக்கள் முட்டாள்கள் இல்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக கடந்தாண்டு அக்கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டது. இது தேர்தல் நாடகம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இனிமேல் பாஜக உடன் கூட்டணி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து காத்திருக்கும் அதிமுக... கண்டுகொள்ளதாக பாமக, தேமுதிக- அதிர்ச்சியில் எடப்பாடி

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதில் இருந்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டாலும் மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாஜகவுடன் கூட்டணிக்கு வராவிடில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக அதிமுகவினர் மிகவும் வருத்தப்படுவார்கள். பாஜகவை சாதாரணமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படியில்லை என்பதைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்துகொள்வார்கள். 

இதையும் படிங்க;-  இதுதான் அரசியல் நடைமுறை.. ஜால்ரா போடுவர்களை நம்பாதீங்க.. எடப்பாடியை எச்சரிக்கிறாரா பூங்குன்றன்?

2019, 2021- பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, இப்போது பசுத்தோல் போர்த்திய புலிபோல் இருந்தால் அதை நம்ப மக்கள் முட்டாள்கள் இல்லை. எடப்பாடி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், 13% இஸ்லாமிய வாக்குகளில் 1% வாக்குகளை பெறுவதே கடினம். எடப்பாடி பழனிசாமி இந்துக்களின் வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் இழக்கப்போகிறார் என ராம சீனிவாசன் கூறியுள்ளார். 

click me!