கூட்டணி தர்மத்தை மீறும் அதிமுக.. புகழேந்தியை அடக்கி வையுங்கள், எச்சரிக்கும் கே.டி ராகவன்.

Published : Dec 22, 2020, 10:32 AM IST
கூட்டணி தர்மத்தை மீறும் அதிமுக.. புகழேந்தியை அடக்கி வையுங்கள், எச்சரிக்கும் கே.டி ராகவன்.

சுருக்கம்

அஇஅதிமுக வின் செய்தி தொடர்பாளர் திரு.புகழேந்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்களை பா ஜ க தலைமை நீக்க வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.  

அஇஅதிமுக வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்களை பா ஜ க தலைமை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: 

அஇஅதிமுக வின் செய்தி தொடர்பாளர் திரு.புகழேந்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்களை பா ஜ க தலைமை நீக்க வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.அஇஅதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றளவும் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது என்றும் பா ஜ க - அதிமுக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவு படுத்திய பிறகும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. 

கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளோடு திரு.புகழேந்தி போன்றவர்கள் கைகோர்த்துள்ளனரோ என சந்தேகிக்க தோன்றுகிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை குறித்து பேசுவதற்கு திரு புகழேந்தி போன்றவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதிமுக வின் தலைமை இவர்களை போன்றவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!