ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jan 21, 2023, 8:45 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு ழுழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். 2026ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு ழுழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம் என  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு ழுழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். 2026ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை கேட்பதற்கு முழு உரிமை உள்ளது என்றார். 

இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு என்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டான். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவளிப்போம். பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றன. பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம் என ஓபிஎஸ் தெரிவித்தார். 

மேலும், பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம். இபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை இபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

click me!