’யாரும் கண்டுக்க வேண்டாம்...’ ராமதாஸ் போட்ட உத்தரவு... கேப்டன் கட்சி மீது அதிமுக டென்சன்..!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2019, 4:03 PM IST
Highlights

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யாமல் தேமுதிக காலம் தாழ்த்தி வருவதால் அதிமுக முடிவெடுக்க முடியாமல் கடுப்பாகி வருகிறது. 

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யாமல் தேமுதிக காலம் தாழ்த்தி வருவதால் அதிமுக முடிவெடுக்க முடியாமல் கடுப்பாகி வருகிறது. 

தனித்து நிற்பதா? டி.டி.வி.அணியில் இணைவதா? அதிமுக கொடுக்கும் சீட்டுக்களை பெற்றிக் கொண்டு கூட்டணியை உறுதி செய்வதா? என முடிவெடுக்க முடியாமல் அலைபாய்ந்து தவிக்கிறது தேமுதிக. போதாக்குறைக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சகட்டு மேனிக்கு அனைத்து கட்சியினரையும் மேடைகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனை தொடர்ந்தே இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் ‘’தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சந்தோசம். வராவிட்டாலும் கவலை இல்லை’ என தெரிவித்தது தேமுதிகவை அதிர வைத்துள்ளது. தேமுதிக இன்னும் இழுத்துக் கொண்டே சென்றால் அதிமுக கூட்டணி கதவை சாத்த தயாராகி விட்டது.

 

இதுவரை தேமுதிக கூட்டணி பற்றி கவலையில் இருந்து வந்த அதிமுக இப்போது இறுதி முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பாமகவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்த நிலையில் அவர்களது தரப்பில் இருந்து பதிலடி தர வேண்டாம். தேர்தலில் ஜெயிப்பது மட்டுமே நம்ம குறிக்கோள் என பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

 

இப்போது அதிமுகவுக்கு இருக்கும் ஒரே சிக்கல் தேமுதிக மட்டுமே. ’’பொதுக்கூட்டத்தில் அல்லது பொதுவெளியில் அரசியல் கட்சிகளை விமர்சிப்பதை கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக எடுத்து கொள்ளக் கூடாது. அது வேறு. கூட்டணி வேறு’ என மகன் பேசியதற்கு மன்னிப்பு கேட்காமலும். அதே சமயத்தில் அவன் சின்ன பையன் ஒன்றும் தெரியாது என்பது போலவும் பட்டும் படாமலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் விரிசல் விழாமலும் பேசி வருகிறார் பிரேமலதா. ஆனாலும், ‘சூடு சொரணை இல்லை’ எனச் சொல்லி எங்களை திட்டிவிட்டு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனப்பேசுவதா? என அதிமுக நிர்வாகிகள் கொந்தளித்து வருகிறார்கள். 

click me!