இடைத்தேர்தலுக்காக ரூ.1000,00,000 பேரம்... அதிமுகவை அதிர வைக்கும் சுயேச்சை வேட்பாளர்..!

Published : Apr 01, 2019, 12:21 PM IST
இடைத்தேர்தலுக்காக ரூ.1000,00,000 பேரம்... அதிமுகவை அதிர வைக்கும் சுயேச்சை வேட்பாளர்..!

சுருக்கம்

இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க 10 கோடி ரூபாய் தர அதிமுக தம்மிடம் பேரம்பேசியதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், விளாத்திகுளம் சுயேட்சை வேட்பாளருமான மார்கண்டேயன் அதிரடி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க 10 கோடி ரூபாய் தர அதிமுக தம்மிடம் பேரம்பேசியதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், விளாத்திகுளம் சுயேட்சை வேட்பாளருமான மார்கண்டேயன் அதிரடி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகி விளாத்திகுளம் தொகுதியில் தனித்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.   

விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தனக்கு சீட் கொடுக்கும் என மார்க்கண்டேயன் அதீத நம்பிக்கையில் இருந்து வந்தார். ஆனால், முன்னாள் எம்.எல்.ஏவான சின்னப்பனை வேட்பாளராக அறிவித்தது அதிமுக தலைமை. மார்க்கண்டேயன், தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முநாதனின் தீவிர ஆதரவாளர். சின்னப்பன், வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்.

இதனால் விரக்தி அடைந்த மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகினார்.  பின்னர் தனித்து களமிறங்கிப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அதிமுக குறித்து திடுக் குற்றச்சாடை முன் வைத்துள்ளார். ‘’ விளாத்திகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தனக்கு 10 கோடி ரூபாய் பணம் தருவதாகவும், மேலும், மாவட்டச் செயலாளர், வாரிய செயலாளர் பதவி தருவதாக அதிமுக தலைமை பேரம் பேசியது. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களிடம் எனக்கு தனித்த செல்வாக்கு இருப்பதால் நானே விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட உள்ளேன். அதிமுக பேரம் பேசியதற்கு தண்டனையாக எனது வெற்றி இருக்கும்’’ என அவர் தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!