ஓ.பி.எஸ் இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் செல்லூர் ராஜு.
மதுரையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,” தற்போது நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி ஆவார். எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர்.
இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுக்கள். ஓ.பி.எஸ் இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரஸும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். விஷால் நான்கு, ஐந்து படங்களில் நடித்ததும் நான் தான் அடுத்த முதல்வர் என்று கட்சி ஆரம்பித்தார்.
இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!
ஆனால் அந்த கட்சி எங்கு போனது என்று தெரியவில்லை. கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். ஆனால், தற்போது நீதி ,மய்யம் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. விஜய்யின் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வரலாம்” என்று நடிகர் விஜய்க்கு ஆதரவான கருத்தை கூறியுள்ளார் செல்லூர் ராஜு.
இதையும் படிங்க..கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு