2021 ல் அதிமுக ஆட்சிதான்.. வேலூர் அதிமுக கோட்டை.. ஸ்டாலின் கனவு பலிக்காது ..! அமைச்சர் வேலுமணி ஆரூடம்..!

Published : Nov 02, 2020, 08:13 PM IST
2021 ல் அதிமுக ஆட்சிதான்.. வேலூர் அதிமுக கோட்டை.. ஸ்டாலின் கனவு பலிக்காது ..! அமைச்சர் வேலுமணி ஆரூடம்..!

சுருக்கம்

ஸ்டாலின் கோவையை கைப்பற்ற நினைக்கிறார் அவரது கனவு பலிக்காது.2021 அதிமுக ஆட்சி தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.  

ஸ்டாலின் கோவையை கைப்பற்ற நினைக்கிறார் அவரது கனவு பலிக்காது.2021 அதிமுக ஆட்சி தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... , “திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி கோவை வந்து செல்கிறார். அத்துடன் அவர் பல பொய் புகார்களை கூறி வருகிறார். எப்படியாவது கோவை மாவட்டத்தை பிடித்துவிட வேண்டும் என ஸ்டாலின் கனவு காண்கிறார். அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. ஏனென்றால் கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை; இந்த கோட்டையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் அளித்துள்ளார் . 50 ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து ஆண்டுகளில் அவர் நிறைவேற்றி காட்டியுள்ளார். எனவே மக்களிடம் வாக்கு கேட்க நமக்கு மட்டும்தான் தகுதி உள்ளது. திமுகவினருக்கு தகுதி இல்லை. அவர்கள் வெறும் பொய் பிரச்சாரம் மட்டுமே கூறிவருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பொய் பிரச்சாரங்களை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி வரும் திமுகவினர் தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள்.

ஒரு விவசாயி அதிமுகவின் முதலமைச்சர் ஆகியுள்ளார். அவர்தான் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர். அது உறுதி; மக்கள் எப்போதும் நம்மை தான் ஆதரிப்பார்கள். திமுகவைப் பொறுத்தவரை அவர்களின் குறிக்கோள் பொய்யுரையை, அவதூறை பரப்புவது தான். அம்மா அரசு வந்தவுடன் கட்டப்பஞ்சாயத்து இல்லை, நில அபகரிப்பு, கடைகளில் வசூல் இல்லை. உறுதியாகக் கூறுவேன் 2021ல் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். இதை யாரும் மாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!