மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்த அதிமுக.. எக்ஸ்பிரஸ் வேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி... கலக்கத்தில் திமுக..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2020, 4:54 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சரின் இந்த அதிரடி சுற்றப்பயணம் அதிமுகவுக்கு கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி தமிழக முதலமைசார் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.  இதுவரை 20 மாவட்டங்களுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். 

அதை தொடர்ந்து பல்வேறு தொழில்முனைவோர்களுடனும், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வரும் 6ம் தேதி திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சரின் இந்த அதிரடி சுற்றப்பயணம் அதிமுகவுக்கு கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதலமைச்சரின் இந்த சுற்றுப் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன.கொரோனாவை காரணம் காட்டி மற்ற கட்சிகளை அரசியல்  கூட்டம் நடத்தக்கூடாது என சொல்லிவிட்டு முதலமைச்சர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சுற்றுப்பயணம் செய்வதாக ஆதங்கம் தெரிவித்து வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக அரசு அதிரடியாக மக்கள் நல திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருவது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.  

 

click me!