ADMK vs BJP : பாஜகவை திட்ட வேண்டாம்..! பல்டி அடித்த அதிமுக தலைமை- அதிர்ச்சியில் ஜெயக்குமார், சிவி.சண்முகம்

By Ajmal Khan  |  First Published Sep 20, 2023, 11:02 AM IST

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இனி பாஜகவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 


அதிமுக- பாஜக மோதல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தேர்தலை எதிர் கொள்ள தீவிரமாகி வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவும் தேர்தல் பணிகளை தொடங்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுகவுடன் கடந்த 2019 முதல் கூட்டணி இருக்கும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

தமிழகத்தில் எதிர்க்கட்சி யார் என்று போட்டியானது அதிமுக-பாஜக இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிற்கும் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து அதிமுக அதிர்ச்சியை உருவாக்கியது.

 அண்ணாமலைக்கு எதிராக சீறிய பாஜக

இதனை அடுத்து அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில்,  பாஜக தேசிய தலைமை அதிமுக மற்றும் பாஜக தலைவர்களை  டெல்லிக்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் காரணமாக சற்று ஓய்ந்திருந்த பிரச்சனையானது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அறிஞர் அண்ணா தொடர்பாக அண்ணாமலை பேசிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனால்  அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அறிவித்தார்.

பாஜகவை விமர்சிக்க தடை

இதனை அடுத்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அதே போல அதிமுகவுடன் 'நன்றி இனிமேல் திரும்பி வந்திடாதீங்க' என்ற வாசகத்தையும் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இப்படி ஒருவருக்குள் ஒருவர் கருத்து மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில் அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது.

கூட்டணி தொடர்பாக ஏற்கெனவே  நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், வேறு யாரும் பொது வெளியில் கூட்டணி தொடர்பாகவோ.? பாஜக தொடர்பாகவோ பேசக்கூடாது என தெரிவித்துள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் கூட்டணி மற்றும் பாஜக குறித்து பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளது. 

மறுப்பு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள்

பாஜகவிற்கு எதிராக போஸ்டர் ஒட்டுவது, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருந்த போதும் இந்த தகவலை அதிமுக மூத்த நிர்வாகிகள் உறுதிப்படுத்தவில்லை. அப்படி எந்த ஒரு உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலைக்கு எதிராக பேசாதது ஏன்.? ரெய்டு வந்திடும் என்ற அச்சமா.? திமுகவை விளாசும் செல்லூர் ராஜூ

click me!