அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை.. அதிமுகவுக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபர ஐடியா.!

Published : Jun 19, 2022, 09:20 PM IST
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான்  தேவை.. அதிமுகவுக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபர ஐடியா.!

சுருக்கம்

 அதிமுகவில் எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க திமுக மறுத்துவிட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திறம்பட செயல்பட வேண்டும் என்றால் அக்கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பதுதான் நல்ல தீர்வாக இருக்கும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி எரியும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாறி மாறி தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், அடுத்த மூன்று தினங்களில் அதிமுகவில் பிரச்சனை முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க திமுக மறுத்துவிட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈஸ்வரன் பெருமாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசியலில் தற்போது அதிமுகவின்  ஒற்றை தலைமை விவகாரம்தான் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திறம்பட செயல்பட வேண்டும் என்றால் அக்கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பதுதான் நல்ல தீர்வாக இருக்கும். அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமை அக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்க்கவும் நீக்கவும்தான் உதவுகிறது.  எதிர்க்கட்சியாக  மக்களுக்காக குரல் கொடுக்க  ஒற்றைத் திறமை இருந்தால்தான் திறம்பட செயல்பட முடியும். அபோதுதான் குரல் கொடுக்க முடியும். அதனால்தான் நான் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது நிரந்தர தீர்வாக அமையும் என்று சொல்கிறேன்” என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!