சசிகலா தலைமையை நோக்கி நகரும் அதிமுக.. நச்சுன்னு சொன்ன அதிமுக முன்னாள் நிர்வாகி..!

By vinoth kumarFirst Published Oct 12, 2021, 10:14 PM IST
Highlights

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அசத்தி உள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார்க்கும் போது பாஜகவுக்கு பாடை தயாராகிறது என்பதை காட்டுவதாக நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அசத்தி உள்ளது. 

140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 117 இடங்களிலும், அதிமுக 05 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 466 இடங்களில் அதிமுக 46 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் பாமக 13, தேமுதிக 1, அமமுக 2 சுயேட்சைகள் 29 என முன்னணியில் இருந்து வருகிறார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது கடந்த தேர்தலில் பாதிக்கு பாதி அடித்த அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் வெளியிட்டு டுவிட்டர் பதிவில்;- திமுக வானை நோக்கி உயர்கிறது; அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது; பாஜகவிற்குப் பாடை தயாராகிறது.! வாழ்க வாக்காளர்கள்.!" என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.

click me!