அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி !! எஸ்.பி வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏக்கள் மீது போலீசார் வழக்கு.. கோவை பரபர !!

By Raghupati RFirst Published Feb 20, 2022, 10:02 AM IST
Highlights

கோவை கலெக்டர் ஆபீசில் தர்ணாவில் ஈடுபட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக எம்எல்ஏக்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட நபர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் சப்ளை செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வந்தனர். உள்ளாட்சி தேர்தலில் வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர்கள் பணம் , பரிசு பொருட்கள் சப்ளை செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வந்தனர்.

வெளியூர் சேர்ந்தவர்களை வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சரும் , எம்எல்ஏவுமான எஸ்.பி வேலுமணி உட்பட 9 எம் எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து கோஷமிட்டு கடும் எதிர்ப்பு காட்டினர் போராட் டத்தை கைவிட மறுத்து அவர்கள் ஆவேசமாக பேசினர்.

இவர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் , போலீஸ்துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் போராட்டத்தை நிறுத்த வில்லை. வேலுமணி உட்பட அதிமுகவினர் அதே இடத்தில் படுத்தபடி எதிர்ப்பு காட்டினர்.

கோவை இதைத்தொடர்ந்து போலீசார் வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் பொள் ளாச்சி ஜெயராமன் , பி.ஆர்.ஜி அருண்குமார். அம்மன் அர்ஜூனன். ஏ.கே.செல் வராஜ், வி.பி.கந்தசாமி , கே.ஆர் ஜெயராமன் , அமுல் கந்தசாமி தாமோதரன் ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீ சார் வழக்குப்பதிந்து செய்து கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் , தொற்று நோய் பரவல் தடுப்பு சட் டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!