திமுகவை கண்டித்து சட்டமன்றத்தில் அதிமுக MLAக்கள் முழக்கம்.. வெளிநடப்பு.. தர்ணா.. பொய் வழக்கு என ஓபிஎஸ் அலறல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 10:58 AM IST
Highlights

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாட்டு மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. கொடநாடு விவகாரம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அதை மீண்டும் எடுத்து புதாகரமாக்க திமுக அரசு முயற்சி செய்கிறது, 

திமுக அரசு பொய் வழக்கு போட்டு அதிமுகவை ஒடுக்க முயற்சி செய்கிறது எனவும், அதேபோல் கொடநாடு வழக்கை மீண்டும் கையில் எடுத்து அதிமுகவினர் மீது வழக்கு போட திமுக சதி செய்கிறது எனவும் கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்றும் நாளையும் இரண்டு தினங்கள் சட்டமன்ற கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிக்க உள்ளதாக அவர் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சட்ட மன்றம் கூடியவுடன், கொடநாடு விவகாரத்தை திமுக பூதாகரமாக்கி அதில் அதிமுகவினரை சிக்க வைக்க சதி செய்வதாக கூறி , அதிமுகவினர் சட்டமன்றத்தில் பேச முற்பட்டனர். ஆனால் ஆதற்கு அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சட்டமன்றத்தில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதுடன், சட்ட மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாட்டு மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. கொடநாடு விவகாரம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அதை மீண்டும் எடுத்து புதாகரமாக்க திமுக அரசு முயற்சி செய்கிறது, அதில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட சதி செய்து வருகிறது, ஏற்கனவே அதிமுகனவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டு வருகிறது என்றார். மேலும், எந்த வழக்குகளாக இருந்தாலும் அதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்ற அவர், அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என்றார், கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை வேண்டும் என்றே திமுக அரசு பெரிதுபடுத்துகிறது. எனவே இன்றும் நாளையும் சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பார்கள் என ஓபிஎஸ் கூறினார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு உரிய முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் அதிமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது போல, குற்றவாளிகளிடத்தில் பொய் வாக்கு மூலம் பெற்று பொய் வழக்கு போட முயற்ச்சிகள் நடக்கிறது என்றார். இது குறித்து பேச அனுமதி கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, எனவே அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம், என்றார். கொடநாடு வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் மீண்டும் அதை நீதி மன்ற உத்தரவு இல்லாமல் விசாரணைக்கு எடுத்திருப்பது சட்ட விரோதம் என்றார். அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக பாமக, பாஜக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தார். பின்னர் கலைவாணர் அரங்கத்தின் நுழைவாயிலில் அமர்ந்து ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

click me!