சசிகலாவின் உடல்நலம் விசாரித்த அதிமுக எம்எல்ஏ? அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..!

Published : Jan 25, 2021, 02:04 PM IST
சசிகலாவின் உடல்நலம் விசாரித்த அதிமுக எம்எல்ஏ? அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..!

சுருக்கம்

சசிகலாவின் உடல்நலம் குறித்து வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் நலம் விசாரித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

சசிகலாவின் உடல்நலம் குறித்து வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் நலம் விசாரித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பர் மருத்துவர் பரமசிவம். இவர் அதிமுக இளம்பெண் இளைஞர் பாசறை மாநில செயலாளராகவும் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேடசந்தூர்  தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ பழனிச்சாமிக்கே சீட் அறிவிக்கும் நிலை இருந்தது. ஆனால், சசிகலாவின் ஆதரவால் பரமசிவம் சீட் பெற்றார்.

டிடிவி.தினகரன் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட எம்எம்ஏக்களில் இவரும் ஒருவர். அதன் பின்னர் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்து கேள்விபட்டு டிடிவி.தினகரனின் மைத்துனர் வெங்கடேஷிடம் நலம் விசாரித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் எம்எல்ஏ பரமசிவம் நலம் விசாரித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுதொடர்பாக விசாரித்த போது இது பொய்யான செய்தி உண்மை இல்லை. திட்டமிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!