திமுகவிலிருந்து தாவிய பாஜக வேட்பாளருக்கு டிமிக்கி கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்... என்ன கொடுமை சரவணா..?

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2021, 4:14 PM IST
Highlights

மதுரை மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் எட்டு தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை பாஜகவுக்கும், மற்றொரு தொகுதியை இன்னொரு அமைப்புக்கும் கொடுத்துள்ளனர்.
 

மதுரை மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் எட்டு தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை பாஜகவுக்கும், மற்றொரு தொகுதியை இன்னொரு அமைப்புக்கும் கொடுத்துள்ளனர்.

போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்,  ராஜன் செல்லப்பா ஆகியோர் போட்டியிடும் 3 தொகுதிகளில் மட்டுமே தொண்டர்கள் ஆர்வமாக பணியாற்றுவதாக கூறுகிறார்கள். இதில் அமைச்சர்கள் மீதான அதிருப்தி, தொகுதி மாறிய ராஜன் செல்லப்பா ஆகியோரின் செயல்பாட்டால் இம்முறை மூவரும் வெல்வது குதிரைக்கொம்புதான் என்கின்றனர். 

இது ஒருபுறமிருக்க மற்ற 7 தொகுதிகளில் அதிமுக கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில்லை என்கிறார்கள். அதில் மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் அதிமுக கட்சியினர் சொந்த வேட்பாளர்களுக்கே தண்ணீர் காட்டுவதாக கூறுகிறார்கள். இவர்கள் இந்த தொகுதி வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு வருகிறார்கள். இது மற்ற அதிமுக வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

 

மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் சரவணனிடம், அதிமுகவினர் தினமும் பணம் வாங்கிக்கொண்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதிக்கு பறந்து விடுகிறார்கள். இதுகுறித்து தனது கட்சி தலைமை, அதிமுக தலைமைக்கு டாக்டர் சரவணன் புகார் செய்தும் பலனில்லை என்கிறார்கள். இப்படியே சென்றால் இந்த முறை மதுரை மாவட்டத்தில் அதிமுக ஒரு சீட் பெறுவதே பெரிய விஷயம்தான் என்கிறார்கள். சொந்தக்கட்சியினரும் கண்டு கொள்வதில்லை.

click me!