பெண்கள் பற்றி பேசும் பிரதமர் பொள்ளாச்சி பற்றி பேசினாரா? மோடியை திக்குமுக்காட வைத்த ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Apr 1, 2021, 4:00 PM IST
Highlights

பிரதமர் மோடி அவர்களே… தி.மு.க. ஆட்சி இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்களே… தயவுசெய்து பொள்ளாச்சிக்கு வந்து கேளுங்கள். இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பொள்ளாட்சியில் வந்து கேளுங்கள். நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோடி எதிர்ப்பு அலை வீசியது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு இடம் கூட மோடி தலைமையில் இருக்கும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல எடப்பாடி மீதான எதிர்ப்பலையும் சேர்ந்து வாஷ் அவுட் ஆகப்போகிறார்கள். இது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள் என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் பேசுகையில்;- அண்மையில் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்து பேசியிருக்கிறார். அங்கு தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களே… தி.மு.க. ஆட்சி இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்களே… தயவுசெய்து பொள்ளாச்சிக்கு வந்து கேளுங்கள். இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பொள்ளாட்சியில் வந்து கேளுங்கள். நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோடி எதிர்ப்பு அலை வீசியது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு இடம் கூட மோடி தலைமையில் இருக்கும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.

இப்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல எடப்பாடி மீதான எதிர்ப்பலையும் சேர்ந்து வாஷ் அவுட் ஆகப்போகிறார்கள். இது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். இந்த அலை அவர்களை அடியோடு அகற்றப்போகிறது. அது தான் உண்மை. அதே நேரத்தில் நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது, பாஜக வரப்போவதில்லை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்கப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

இன்றைக்கு மத்தியில் மோடி தலைமையில் இருக்கும் பாஜக அரசு எப்படியாவது தமிழ்நாட்டில் மதவெறியை திணித்து, நம்முடைய பிள்ளைகள் மருத்துவக்கல்வி படிக்கக்கூடாது என்று நீட் தேர்வை திணித்து, இந்தியை திணித்து, மதவெறியை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. நான் பெருமையோடு சொல்கிறேன். இது தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா பிறந்த மண் – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது.

நாம் இழந்திருக்கும் உரிமைகளை, மாநில உரிமைகளை மீட்க வேண்டும். மாநில சுயாட்சியை நாம் பெற வேண்டும். நம்முடைய தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் இவர்கள் வெற்றி பெறவேண்டும். எனவே நீங்கள் அத்தனை பேரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பெரும் ஆதரவைத் தரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!