அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த குன்னம் எம்.எல்.ஏ.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Jun 12, 2019, 10:13 AM IST
Highlights

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது, ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கூறிய கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தார். 

இதனிடையே கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க வேண்டும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டம் ஆகும். 

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. தான் உடல் உடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

click me!